நெடுந்தீவில் பன்றி தாக்கியதில் பெண் பலி!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கிழக்கு 15ஆம் வட்டாரத்தை சேர்ந்த நாகமுத்தன் இலட்சுமி (வயது 80) பன்றி தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமானார்.

நேற்றையதினம் (ஆகஸ்ட் 23) அயல் வீட்டில் உள்ள வளர்ப்புப் பன்றி கட்டுமீறி வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியை தாக்கி படுகாயமடைய செய்த நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரவு வேளை நெடுந்தீவு வைத்தியசாலையில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றிய நிலையில் இன்று (ஆகஸ்ட் 24) அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மரணவிசாரணைகளின் பின்னர் இன்று மாலை உடல் உறவினரகளிடம் கையளிக்கப்பட்டு, நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Share this Article