நெடுந்தீவில் சிறப்புற நடைபெற்ற சிறார்களுக்கான நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் நிகழ்வு நேற்றையதினம் (மே 25) சனிக்கிழமை நெடுந்தீவு கிழக்கு சன சமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. 

வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு கிழக்கு சன சமுக நிலையத்தின் இரகுபதி நூலகத்தில் அங்கத்தவராகியுள்ள மற்றும் அங்கத்தவராக ஆர்வமுள்ள ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான நூலக அறிமுகம், கதை கூறல் மற்றும் வாசிப்பு ஆர்வத்தினை ஊக்குவித்தல் போன்ற நிகழ்வுகள்  இடம்பெற்றன.

நிகழ்வின்  வளவாளராக நெடுந்தீவு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவஅபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.டானியல் பிராங்கன் நிஷாந்தினி அவர்கள் கலந்துகொண்டு சிறார்களுக்கான கருத்துரைகளினை வழங்கியிருந்தார்.

Share this Article