நெடுந்தீவு பிரதேசசெயலக உத்தியோகத்தர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில்சதுரங்க சுற்றுத் தொடர் நெடுந்தீவு பிரதேசமட்டத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டிகளில் அனைத்து வயது பிரிவினரும் கலந்துகொள்ளவதற்குவாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக போட்டிகளில் பங்குகொள்ள ஆர்வமுடையவர்கள்பிரதேசசெயலகத்தின் உத்தியோகத்தர் நலன்புரிசங்கத்தின் பொருளாளர் யே. ஜீவராஜ் அவர்களிடம் தங்கள் பெயர் விபரங்கள் அடங்கப்பெற்ற விண்ணப்பபடிவத்தினை 2025 ஜூலை 31 இற்கு முன்பதாக பூர்தியாக்கி வழங்குமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை போட்டியாளர்களுக்கான விண்ணப்பங்கள் பாட்சாலைகள் ஊடாக சேகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போட்டிகள் நடாத்தப்படவுள்ள காலம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்பதுடன் தொலைபேசி வாயிலான உறுதிப்படுத்தல்கள் தவிர்கப்படுகிறது என நெடுந்தீவு பிரதேச செயலக உத்தியோகத்தர் நலன்புரிசங்கம் அறிவித்துள்ளது.