நெடுந்தீவில் உயிர்காக்கும் உன்னத பணியில் 45 பேர் இணைவு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இன்று (ஜூன்06)  இடம்பெற்ற இரத்ததான முகாமில் 45 கொடையாளர்கள் உதிரம் கொடுத்து உயிர் காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை (ஜூன்06) காலை 8.30 மணி தொடக்கம் பி.ப.1.00 மணிவரை நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு குருதி வழங்கும் வகையில் இடம்பெற்றது.

உயிர்காக்கும் உன்னத பணியில் இணைந்த இளைஞர், யுவதிகள், நெடுந்தீவில் கடமையிலுள்ள கடற்படையினர், பொலிஸார் ஆகிய கொடையாளர்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்க யாழ் கிளையினரால் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இலங்கை செஞ்சிலுவைசங்க நெடுந்தீவு கிளை, நெடுந்தீவு பிரதேச இளைஞர்கழக சம்மேளனம்  மற்றும் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையும் இணைந்துஇரத்ததான முகாமினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article