நெடுந்தீவுக் கல்விக்கோட்டத்தின் அனைத்து பாடசாலைகளின் தரம் ஒன்று முதல் பதின்மூன்றாம் தரம் வரையிலான அனைத்து மாணவர்களுக்குமான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதி வழங்கப்படவுள்ளது.
புதிய தவணையில் கற்றலை தொடரும் மாணவர்களின் நலனை கருதியதாகவும் நாட்டின் பொருளாதார நிலைமைகளை கருத்திற்கொண்டும் இந்த உதவித் திட்டம் வழங்கப்படவுள்ளது.
நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் ஏற்பாட்டிலும் பங்குத்தந்தையின் நெறிப்படுத்தலுக்கு அமைவாகவும் எதிர்வரும் ஞாயிற்று கிழமை மாலை 04:00 மணிக்கு பங்குப்பணிமனையில் இக்கற்றல் உபகரண பொதிகள் வழங்கிவைக்கப்படவுள்ளன.
உள்நாட்டிலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் பலர் உதவிபுரிந்ததாகவும், இத்திட்டத்தினூடாக தீவின் அனைத்து மாணவர்களும் பயன்பெற முடிந்ததாகவும் நம் தீவின் கவ்வி முன்னேற்றத்தில் உறுதியாயிருக்கும் பலரது தாராளவுள்ளத்தை கண்டு வியப்பதாகவும் நன்றியாயிருப்பதாகவும் பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகளார் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பான அறிவித்தலானது கல்விக்கோட்டத்தின் பாடசாலைகளூடாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.