நெடுந்தீவின் சுற்றுலா வழிகாட்டி கைநூலுக்கான, சுற்றுலாவிகள் சேவையாளர் தரவுகள் கோரல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முக்கிய தொல்லியல் சுவடுகளைக் கொண்ட முக்கிய பிரதேசமாகவுள்ள நெடுந்தீவின் சுற்றுலா வழிகாட்டி கைநூல் தயாரிக்கப்படவுள்ளதால் நெடுந்தீவின்  சுற்றுலாதுறை சார்ந்தோர் தொடர்பான விபரங்கள் கோரப்பட்டுள்ளது.

நெடுந்தீவுக்கு வருகின்ற ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் நெடுந்தீவின ஒவ்வொருதொல்லியல் சின்னங்கள் தொடர்பில் முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் நெடுந்தீவைச் சேர்ந்த ஆசிரியர் அந்தோணிபிள்ளை ரோனிராஜன், ஆங்கில மொழிமூலமான சுற்றுலா வழிகாட்டி கைநூல் ஒன்றினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இக் கைநூலில் நெடுந்தீவில் உள்ள தங்ககங்கள், விடுதிகள், ஹொட்டல்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா வாகன விபரங்கள் என்பன தொடர்பாக தகவல்களை உள்ளடங்க உள்ளதால், அவை தொடர்பில் உரிமையாளர்கள் தங்கள் சேவை பற்றிய விபரங்களை தெளிவான புகைப்படத்துடன் +94 77 519 8147 எனும் WhatsApp இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article