நெடுந்தீவு மண்ணின் மைந்தனும் எழுத்தாளரும் கவிஞருமான எஸ். அமலஜானு அவர்களின் மூன்றாவது படைப்பான ‘கடவுளுக்குக் கடதாசி’ எனும் புதிய நூல், தற்போது நடைபெற்று வரும் மதுரைப் புத்தகத் திருவிழா – 2026 இல் நாளை (15/11) வெளியிடப்படவுள்ளது.

ஆழமான மெய்யியல் தேடலும், வாழ்வியல் தத்துவங்களும் நிறைந்த இப்படைப்பு, எமது தீவகத்தின் இலக்கியப் பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லாகும். மதுரைப் புத்தகத் திருவிழா அரங்கிலும், டிஸ்கவரி வெளியீட்டாளரிடமிருந்தும் இந்நூலைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது