பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்விற்கு அமைவாக சிற்றுண்டிகள், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

 அதற்கமைய, சிற்றுண்டிகளின் விலையை 5 ரூபாயினாலும், ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலையை 15 ரூபாயினாலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

 நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலையை அதிகரிக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

 இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாயினாலும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 732 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment