நெடுந்தீவின் அபிவிருத்திக் குழுக்கள் தொடர்பான கலந்துரையாடல் – ஜூன் 22

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவை நிலையான அபிவிருத்தி செய்யும் நோக்கில் நெடுந்தீவு ஊரும்உறவும் நிறுவனத்தினால்  இலங்கை மற்றும் சர்வதேச மட்டத்தில்கலந்துரையாடல்கள்  நாளையதினம் (ஜூன்22) இணைய வழியில் நடைபெறவுள்ளது.

“மீண்டும் ஊருக்குப் போகலாம்”  எனும் தொனிப்பொருளில் உலகம் முழுவதும் பரந்து வாழும்  ஊரின் உறவுகளைஒன்றிணைத்து 04.08.2024 தொடக்கம் 10.08.2024 வரை “நெடுவூர்த்திருவிழா”நடத்துவதற்கு தீர்மானித்து அற்கான முன்னாயத்த செயற்பாடுகள்நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் நெடுந்தீவின் உறவுகள் பலர் சர்வதேச நாடுகள் சார்ந்தும்இலங்கையின் மாவட்டங்கள் சார்ந்தும் தூரநோக்கு சிந்தனையுடன்அபிவிருத்திக் குழுக்களாக ஊரின் உறவுகள் நண்பர்கள் சமூக ஆர்வலர்கள்பலரை ஒன்றிணைத்து நீண்டகால நோக்கில் தொடர்ந்து செயற்படுவதற்குமுன்வந்துள்ளதாகவும் இவற்றினூடாக காத்திரமான பணியினை மேற்கொள்ளும்வகையில் உள்ளூர், இலங்கை, சர்வதேச மட்டத்தில் இக் கலந்துரையாடல்கள்நடைபெறவுள்ளது.

அதன் அடிப்படையில் கலந்துரையாடல் இடம்பெறும்  நேரங்கள் யாவும் அந்தந்தநாடுகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியா

perth – 7.30Am – 8:30AM

Sydney / Melbourne –

9:30 AM – 10.30 AM

இலங்கை

யாழ்ப்பாணம்  7.30 Am – 8:30AM

கிளிநொச்சி 9.00 Am – 10:00Am

முல்லைத்தீவு 10.30Am – 11:30AM

வவுனியா 3.30 pm – 4:30PM

Europe: 1.30pm – 2:30PM

UK : 12 :30pm – 1:30pm

Canada /America – 8.30am – 9:30am.

ஏனைய மாவட்டக் குழுக்களிடையேயான கலந்துரையாடல் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ZOOM ID:- 81112728524

PASSWORD:- 7777

https://us02web.zoom.us/j/81112728524

அனைவரையும் இக்கலந்துரையாடலில் கலந்து தங்கள் ஒத்துழைப்பினைநல்குமாறு நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினா் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share this Article