நெடுந்தீவு குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்டு வந்த நெடுந்தாரகை படகின் திருத்தவேலைகள் நிறைவடைந்துள்ளதாக வடமாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன் கூறியுள்ளார்.
நேற்றுமுந்தினம் (ஆகஸ்ட் 28) யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே பிரதம செயலாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நெடுந்தாரகை படகு சுமார் 59 மில்லியன் ரூபாய் செலவில் திருகோணமலை துறைமுகத்தில் வைத்து திருத்தவேலைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுறுத் தப்பட்டுள்ளது.
பரீட்சார்த்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மிக விரைவில் நெடுந்தாரகை படகு புங்குடுதீவு – குறிகட்டுவான் துறைமுகத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது. அடுத்த மாதம் இறுதிக்கட்ட பரீட்சார்த்த நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் பிரதம செயலாளர் மேலும் கூறியுள்ளார்.