நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகிறது. பொது மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு அனுமதிக்கப்படாமையால், பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என யாழ்.மாநகரசபை முதல்வர் அறிவித்தும் ஆலயத்திற்கு வருபவர்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
திருவிழா உபயகாரர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டு அனுமதி.
பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடைசெய்யப்பட்டுள்ளது அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டது.