வடக்கு தொடருந்து வரும் திங்கட்கிழமை (ஒக். 21) முதல் மீண்டும் தொடருந்து சேவைகள் மீளத் தொடங்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைவாக, அன்றைய தினம் யாழ்தேவி தொடருந்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, தொடருந்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு தொடருந்து நடைமுறையில் இருக்கும் திருத்தப் பணிகளால், தற்போதைய தொடருந்து சேவை கொழும்பு – கோட்டையிலிருந்து மஹவ வரை மட்டுமே செயல்படுகிறது.