சுனாமியில் தொலைந்த கிணறு புரவியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கடந்த2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையின் போது முல்லைத்தீவு மணற்குடியிருப்பு கடற்கரையில் இருந்த கிணறு ஒன்று மண்ணில் புதைந்து காணாமல்போயிருந்தது.

இந் நிலையில் 16 வருடங்களின் பின்னர் அந்த கிணறு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட புரவி புயலின் போது முல்லைத்தீவு கடல் மட்டம் உயர்வடைந்து கடல் எல்லையை மீறிய அலைகள் மீண்டும் கடல்நோக்கி சென்றபோது காணாமல்போன கிணறு தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Article