நெடுந்தீவு மக்களின் நீண்ட நாள் கோாிக்கைக்கு அமைவாக யாழ் மாவட்ட சிறிலங்கா பொதுஜன முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளா் தம்பித்துரை ரஜீவ் அவா்களால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்றைய தினம் (மாா்ச் – 23) நெடுந்தீவு மக்களின் பயன்பாட்டுக்கென நெடுந்தீவு பிரதேச செயலாளா் திரு.எவ்.சி சத்தியசோதி அவா்களிடம் பொதுஜன பெரமுன நெடுந்தீவு அலுவலகத்தில் வைத்து உத்தியோக புா்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெரமுன கட்சியின் தீவக அமைப்பாளரும், வனஜீவராசிகள் திணைக்களத்தின் இணைப்புச் செயலாளருமான மாாிமுத்து பரமேஸ்வரன் (ஈசன்) நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் நெடுந்தீவு பெரமுன அமைப்பின் நெடுந்தீவு அமைப்பாளருமான பிலிப் பற்றிக் றொஷான் பெருந்தோட்ட இராஜங்க அமைச்சா் கௌர அருந்திக்க பொ்னாண்டோ அவா்களின் வடமாகாண இணைப்பாளா் பாலராமன் அவா்களும் வலிகாமம் கிழக்கு அமைப்பாளா் நடேசன் அவா்களும் தென்மராட்சி பிரதேச அமைப்பாளரும் சாவகச்சோி பிரதேச உறுப்பினருமான சா்வா அவா்கள் நெடுந்தீவு செஞ்சிலுலைச்சங்கம் பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் ஆகியவற்றின் தலைவா் திரு.அருந்தவ சீலன் அவா்களும் கலந்து கொண்டனா்.
நீண்ட நாள் மக்கள் கோாிக்கையினை பலவேறு சந்தா்ப்பங்களில் பல அரசியல் தலைவா்களிடம் கோாிய போதும் 2021ம் ஆண்டில் இத்தேவையினை உணா்ந்து இப்புதிய பேருந்தினை நெடுந்தீவுக்கு பெற்று வழங்கிய சிறிலங்க பொதுஜன முன்னணியினருக்கு நெடுந்தீவு மக்கள் நன்றி தொிவித்து நிற்பதுடன் மிக விரைவாக போக்கவரத்துக்கு ஏற்ற விதத்தில் வீதியினை திருத்தம் செய்து வழங்க ஆவண செய்யவேண்டும் என கேட்டு நிற்கி்ன்றனா்.