நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் 80வது ஆண்டு நிறைவு அமுத விழாவினை முன்னிட்டு வீதியோட்ட நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (30/10) காலை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
நெடுந்தீவு கல்விக் கோட்டப் பாடசாலை மணவர்களுக்கான போட்டியும், நெடுந்தீவு கல்விக் கோட்டப் பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கான போட்டியும் என இரு பிரிவுகளாக ஆண், பெண் போட்டியாளர்களுக்கு தனித்தனியாக இடம்பெற்ற போட்டிகளில் அதிகளவான போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களது ஒத்துழைப்பையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்


அமுத விழாவினை முன்னிட்டு முதல் நிகழ்வாக (30/10) காலை 6.00 மணியளவில் நெடுந்தீவு மகாவித்தியாலய முன்றலில் அமரர் சு.கோபாலசிங்கம் ஞாபகார்த்தமாக ஆரம்பமாகிய வீதியோட்ட நிகழ்வில் பெற்றோர்கள் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் தீவக உறவுகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்