சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தினம் – 2024 நெடுந்தீவு கிராம அலுவலர் பிரிவுகளில் ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச சமுர்த்தி பிரிவினரால் இன்றையதினம் (மே31) “நண்பாபோதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம், வலுவான தேசம்ஒன்றினை கட்டி எழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு பிரதேசகிராம அலுவலர் பிரிவுகளில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


சமூர்த்தி
  அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று முதல் (மே31) ஜூன்14 வரை சர்வதேச புகைத்தல்  மது எதிர்ப்பு  விழிப்புனர்வு வாரமாகநடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


இந்நிகழ்வுகளில்ஒவ்வொரு பிரிவிலும் சமுர்த்தி அலுவலர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Share this Article