புங்குடுதீவில் வீரியம் கொண்ட கொவிட் 19 தொற்றின் காரணமாக திடீரென முடக்கப்பட்ட j/26 கிராமசேவகர் பிரிவில் வாழ்கின்ற நிர்க்கதியான மக்களுக்கு கிராமசேவகர் சந்திரசேகரம் சிறீதரன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியில் இருபது குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கப்பட்டன .
இச் செயற்பாட்டில் சூழக அமைப்பின் நிர்வாககுழு உறுப்பினர்களான குணாளன்,ராகுலன்,ஜீவா,தரங்கன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.