நேர அட்டவணையினைக்கு அமைவாக குமுதினிப்படகு சேவை இடம் பெறாமையால் குறிப்பிட்ட மக்கள் இன்று குமுதினிப்படகு இல்லாமையால் குறிகட்டுவுானில் தாித்து நின்றுள்ளனா்.
வழமையாக குமுதினிப்படகு நேர அட்டவணைக்கு அமைவாக 03 நேர சேவைகள் வழங்கி வருகின்றது. இச் சேவைகள் வழங்க முடியாத நிலமை ஏற்படுகின்ற போது குமுதினிக்கு பதிலாக நெடுந்தாரகை படகு செலுத்துவதற்கான வழி வகைகள் ஏற்படுத்தபட்டுள்ளன.
இன்றைய தினம் கிறிஸ்மஸ் தினம் அன்ற காலையில் படகு சேவை இடம் பெற்றபோதும் மதிய நேர போக்குவரத்து இடம் பெறாமையால் 12.30 மணிக்கு நெடுந்தீவுக்கு செல்வதற்கான சென்ற மக்கள் மாலை 4.00 மணி வரை குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் தாித்து நின்றுள்ளனா்.
சேவைகளில் மாற்றம் ஏற்படுகின்ற போது மக்களுக்கான தகவல்கள் சென்றடைய வேண்டும்.
இதே நேரம் மாலை 04.30 மணிக்கு புறப்படுகின்ற சேவையும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன் புறப்பட்டதாக அறிய முடிகின்றது.
போக்குவரத்து சேவைகள் மாற்றம் அடைகின்ற போது சாியான தகவல்கள் மக்களுக்கு சென்றடைவதில்லை என மக்கள் விசனப்பட்டுள்ளனா். அத்துடன் இன்றைய சேவை இடம் பெறாமை தொடா்பாக பிரதேச சபை தங்களுக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என தொிவித்துள்ளாா்.
போக்குவரத்து செய்யும் மக்களின எண்ணிக்கை குறைவு என்பதற்காக போக்குவரத்து நேரங்களை மாற்றுவது எவளவு பொருத்தம் என்பதையும் குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் தாித்து நின்ற மக்கள் எமக்கு தொிவித்துள்ளனா்.