காரைநகர் கசூரினா கடலில் நீரில் மூழ்கிய இரண்டு பேர், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து நேற்று மாலை (டிசம்பர் 14) காப்பாற்றியுள்ளனர்.
கடற்கரைக்கு வந்த ஒரு யுவதி மற்றும் ஒரு இளைஞர் நீரில் நீராடிய போது, எதிர்பாராதவிதமாக அலைகளால் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உடனடியாக தகவலறிந்து, விரைந்து செயல்பட்ட பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படை உறுப்பினர்கள் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட இருவரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
காப்பாற்றப்பட்ட யுவதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாததால், அவர் வீடு திரும்பியுள்ளார். ஆனால், இளைஞர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் தகுந்த நேரத்தில் செயல்பட்டு இரு உயிர்களையும் காப்பாற்றிய பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினருக்கும், கடற்படையினருக்கும் பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.