காரைநகரில் இடம்பெற்ற “அவளுக்காக ஒர் நாள் ” எனும் தொனிப்பொருளில் ஒன்று கூடல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

காரைநகர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுய உதவிக்குழுக்கள் யாழ் சமூகசெயற்பாட்டு மையம் (JSAC ) நிறுவனத்துடன் இணைந்து கேஎன்எச் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன்   “அவளுக்காக ஒர் நாள் ” எனும்தொனிப்பொருளில்  ஒன்று கூடல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன்02) காலை காரை வடகிழக்கு  சிவகௌரி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றதுடன்  விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக காரைநகர் , பிரதேச செயலர், ரஞ்சனாநவரத்தினம் ,சிறப்பு விருந்தினர்களாக யாழ் சமூக செயற்பாட்டு மையம் இணைப்பாளர் ந.சுகிர்தராஜ் மற்றும் கிராமசேவையாளர்  சி. திருமகள்ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக  சமுர்த்தி அபிவிருத்தி  உத்தியோகத்தர் காரை வடகிழக்கு மற்றும் பொருளாதார அபிவிருத்திஉத்தியோகத்தர் காரை வடகிழக்கு J/47 ஆகியோருடன்

பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,கிராம மக்கள் என பலரும் கலந்துசிறப்பித்தனர்.

Share this Article