நெடுந்தீவுக் பிரதேசத்தில் உள்ள ஏழு பாடசாலைகளில் கல்வி கற்கும் 214 மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள் பிரதேச செயலகத்தின் கேட்போா் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
நெடுந்தீவு சிறுவா் உாிமைகள் மேம்பாட்டு உதவியாளாின் ஏற்பாட்டில் TARANA FOUNDATION அனுசரணையில் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான கல்வி சாா் உபகரணங்களாக மாணவா்களுக்கான புத்தகப்பை, பாதணிகள், வவுச்சா்கள், மற்றும் நூலகத்திற்கான பயிற்சிப் புத்தகங்கள் போன்றன இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டன.
நெடுந்தீவு பிரதெச செயலாளா் மதிப்பிற்குாிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவா்களது தலமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் TARANA FOUNDATION அதிகாரிகள் , மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு இணைப்பாளர்,நெடுந்தீவு சிறுவர் உரிமை மேம்பாட்டு உதவியாளர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்