இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் அமரர் சிவகுருநாதன் அவர்களது ஞாபகார்த்தமாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் கரப்பந்தாட்டத் தொடரின் இந்த ஆண்டுக்கான போட்டித்தொடர் ஆரம்பமாகி இடம்பெற்றுவந்த நிலையில் இறுதியாட்டம் நேற்று (ஒக்ரோபர் 16) இளவாலை வாலிபத்திடலில் மின்னொளியில் இடம்பெற்றது.
மின்னொளியில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகிய இவ் இறுதி ஆட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர் எதிர் புத்தூர் சென்றல் ஸ்டார் அணிகள் மோதின.
பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் ஆரம்பமாகிய இப்போட்டித்தொடரில் பெரும் போராட்டத்தின் மத்தியில் முதலாவது சுற்றினை 23:25 என்ற அடிப்படையில் இந்து இளைஞர் அணி கைப்பற்றியது.
தொடர்ந்தும் 2 ஆவது சுற்றில் சென்றல் ஸ்டார் அணியை 16:25 என்ற அடிப்படையில் வீழ்த்தி தொடர்ந்தும் 3 ஆவது சுற்றினையும் அடுத்தடுத்து 19:25 என்ற அடிப்படையில் பெற்று சம்பியனாகியது ஆவரங்கால் இந்து அணி.
அமரர் சிவகுருநாதன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாணி அணிவித்து நினைவுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரியின் ஆசிரியர் டனிவோல்டர் மற்றும் தொழிலதிபர் றெமினஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஆண்டுதோறும் இப்போட்டித்தொடரை சிறந்த முறையில் நடாத்த பூரண அனுசரனையினை அமரர் சிவகுருநாதன் அவர்களது குடுபத்தினர் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.