நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் உள்ளக முரன்பாடுகள் தீர்வுக்கு வரமால் இன்னும் இழுபறியான நிலையே காணப்படுகின்றது. ஆயட்கால அங்கத்தவர்கள் 06 பேர் இணைந்து சமரச முயற்சிக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களே ஒன்றியத்தினது முகநூலை பாவிப்பார்கள் என விடுக்கப்பட்டிருந்தது ஆயினும் அதனை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரியவருகின்றது.
கனடா மக்கள் அமைப்பின் பொதுக்குழுவால் செயலாளார் அவர்களை பொதுச்சபை பணி நீக்கியுள்ளதாகவும், அவ்வாறாக பணி நீக்கிய செயலளாரின் முயற்சியால் ஆயுட்கால அங்கத்தவர்கள் சிலர் இணைந்து செயற்பட்டதாகவும் நிர்வாகம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் கனடாவில் மீண்டும் ஓர் கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளதுடன் அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பெற்றுக்கொள்ளவில்லை
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பானது 25வருடங்கள் கடந்து நெடுந்தீவில் பணி புரிகின்ற ஓர் அமைப்பு ஆயினும் தற்காலத்தில் இவ் அமைப்பின் செயற்பாடுகள் நடவடிக்கைககள் நெடுந்தீவு மக்களுக்கும் ஊடகங்களுக்கம் ஓர் குழப்பமான நிலமையே காணப்படுகின்றது.
அந்த வகையில் கடந்த வாரம் எமது ஊடகத்தில் எதிர்வரும் 19ம் திகதி பொதுக்கூட்டம் என வழங்கப்பட்ட அறிவித்தல் ஓர் சமரச முயற்சிக்கு பின்னர் கனடா ஒன்றியத்தால் மேற்கொள்ளப்படுதாகவும் குறிப்பிட்ட ஆயுள் அங்கத்தவர்களே முகநூலை பாவனைப்படுத்துவதாகவும் உணர்ந்து அவர்கள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட செய்தி பிரசுரமாகியிருந்தது.
ஆயினும் நிர்வாகம் அப்படியாக ஓர் முடிவினை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளனர் இனிவரும் நாட்களில் கனடா மக்கள் ஒன்றியம் தனது செயற்பாடுகள் தொடர்பாக தலைவர் செயலாளர் பொருளாளர் கையொப்பத்துடன் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் செய்திகளை பிரசுரிக்குமாறு கோரியுள்ளனர்
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைப்பானது ஒற்றுமையினை ஏற்படுத்தி மிகவிரைவாக தாய் மண் பேணி தவப்பயன் அடைவோம் எனும் மகுட வாக்கியத்திற்கு ஏற்ப நெடுந்தீவு அபிவிருத்தி நோக்கி சிறப்பாக பயணிக்க வேண்டும் என்பதே மக்களது விருப்பமாகும