இறுப்பட்டி அபிவிருத்தி சங்க கனடா கிளையால் உதவி வழங்கப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கடந்த புரவி புயலின் தாக்கத்தினால் புங்குடுதீவு பிரதேசம் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளதுடன் 96 குடும்பங்களை சேர்ந்த 485 பேர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்

இவ்வாறான நிலையில் காணப்படும் மக்கள் பல்வேறு அசெகரியங்களுக்க முகம் கொடுத்து வரும் வேளையில் இம்மக்களது நிலமைகளை அறிந்த புங்குடுதீவு இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கம் கனடா கிளை 100 குளிர்தாங்கும் போர்வை 50 நுளம்பு வலை ஆகிவற்றை புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் ஊடாக வழங்கி வைத்திருந்தனர்

இவ் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்கள் நுளம்பு மழை வெள்ளம் போன்றவற்றால் குறிப்பாக சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் பெரிதும் அவல நிலையிலேயே வாழ்ந்து வந்தனர் இந்நிலமையினைக் கருத்திற் கொண்டு உடனடியாக தேவைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து நின்றனர்

Share this Article