கடற்றொழிலாளர்களின் பிரச்சனை தொடர்பில் கலந்துரையாடல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீர்வளத்திணைக்கள உதவி பணிப்பாளரை மக்கள் போராட்ட முன்னணியின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே சந்தித்துள்ளார்.

இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் காரணமாக இலங்கை கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், கடல் வளங்கள் சேதமடைந்து வருவது தொடர்பிலும் உதவி பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அத்துடன், அண்மையில் பலாலி பகுதி கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்றொழிலாளர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வசந்த முதலிகே, இலங்கை கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என தெரிவித்தார்

Share this Article
Leave a comment