சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை எமக்கான முழுமையான விடியலாக கருதி விடக்கூடாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மூச்சு விடுவதற்கான சந்தர்ப்பமாகவே இதனை எடுத்துக் கொள்ளவேண்டும் எனவும் அவர் சபையில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உட்பட ஏனைய நிதி நிறுவனங்கள் நாடுகளிடமிருந்து மொத்தமாக ஏழு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக் கொள்ள முடியுமென்ற தகவலை அதிபர் ரணில் தெரிவித்துள்ளார்.
இந்த கடன்கள் தொடர்பில் எவரும் வெற்றிக்களிப்பில் மயங்கி விடக்கூடாது. நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மூச்செடுக்கக்கூடிய சந்தர்ப்பமாக மட்டுமே இதனை எடுத்துக் கொள்ளவேண்டும்.
அதைவிடுத்து இதை முழுமையான விடியலென நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன் படிக்கை தொடர்பில் அதிபர் ஆற்றிய விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் – மூன்று தசாப்த யுத்தம், கொரோனா, அதனையடுத்து பொருளாதார நெருக்கடி ரஷ்யா – உக்ரைன் யுத்தம் என பல்வேறு பாதிப்புகளை நாடு எதிர்கொண்டதை அனைவரும் அறிவோம் என்றார்.