உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெடுந்தீவில் இடம்பெற்ற நிகழ்வுகள்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை.

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் (ஜூன் 05) சிரமதானம் மற்றும் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. நெடுந்தீவு மத்தி மேற்கு (J/3) கிராம மாதர் சங்க அமைப்பினர் மற்றும் தீவகபெண்கள் வலையமைப்பினர் மற்றும் வைத்திய அதிகாரி, ஊழியர்கள் இணைந்து சிறுசிரமதானம் ஒன்றினைமேற்கொண்டதோடு பயன்தரு மரக்கன்று நாட்டலும் இடம்பெற்றது.

நெடுந்தீவு பிரதேச செயலகம்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு   நெடுந்தீவின் சுற்றுலா இடமான மணற்கடற்கரை பகுதியில் இன்றைய தினம் (ஜூன் 05)  சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

பிரதேசசெயலாளர்  திருமதி நிவேதிகா கேதீசன் அவர்களின் பங்குபற்றலுடன் , பிரதேசசெயலக உத்தியோகத்தர்களும் இணைந்து சிரமதானப் பணியினை முன்னெடுத்தனர்.

Share this Article