‘இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறக்கூடாது. அவ்வாறுஅத்துமீறினால் நிச்சயம் கைது செய்யப்படுவீர்கள். படகுகள் பறிமுதல்செய்யப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை (ஜூன்30) இடம்பெற்ற ஊடகவியலாளர்சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ..
124 இற்கு மேற்பட்ட இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் மயிலிட்டியில்தடுத்துவைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களில்நடவடிக்கை எடுக்கப்படும்.
‘இந்திய மீனவர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. எமது கடற்பரப்புக்குள்அத்துமீறி நுழைந்ததாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தயவு செய்து எமது கடற்பரப்புக்குள் வரவேண்டாம் என இந்திய மீனவர்களிடம்கேட்டுக்கொள்கின்றோம். அதேபோல தடைசெய்யப்பட்ட ரோலர் படகுஉள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிவிட்டு, கடல்வளங்களைஅழித்துவிட்டு எம்மை தொப்புள்கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை. இனியும் அந்த விளையாட்டு வேண்டாம். எமது கடற்பரப்புக்குள் வரவேண்டாம். வந்தால் கைது செய்யப்படுவீர்கள். உடமைகள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.