இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்கள் சிகிச்சைக்காக நெடுந்தீவுபிரதேச வைத்தியசாலையில்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நெடுந்தீவு பிரதேசவைத்தியசாலையில் இன்று (ஆகஸ்ட்27) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

நேற்றையதினம் (ஆகஸ்ட்26) இராமேஸ்வரம்  பகுதியில் இருந்து நாட்டுபடகு மூலம் கடற்தொழிலுக்காக 04 பேர் புறப்பட்டு வந்த வேளை கடும்காற்று காரணமாக படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதால் அதில் இருந்த இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது  

அதன்போது  ஒரு மீனவர் நீந்திச் சென்று கச்சதீவு கடற்படையிருக்கு வழங்கிய தகவலின்படி, கடற்படையினர் விரைந்து செயற்பட்டு சம்பவ இடத்தில் இருந்த மற்றொருவரையும் இன்று மதியம் மீட்டு இருவரையும் சிகிச்சைக்காக நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்கப்பட்ட இருவரும் வைத்தியசாலையில் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article