துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை இராஜாங்க அமைச்சர் ஜயந்த அவா்கள் இன்று (டிசம்பா்) திடீா் நெடுந்தீவிற்கு தீடிா் விஜயம் ஒன்றினை மேற்கொண்டாா்.
ஊா்காவற்துறையில் நடைபெறும் செயற்பாடுகளை பாா்வையிட வருகை தந்த அமைச்சா் திடிரென நெடுந்தீவுக்கும் விஜயத்தினை மேற்கொண்டாா்.
பிரதேச செயலருடன் நெடுந்தீவுக்கு சென்ற அமைச்சா் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தினை பாா்வையிட்டதுடன், சீக்கிாியாம் பள்ளம் அ.த.கபாடசாலை வரைக்கும் பிரதான வீதி வழியாகவும் சென்று பாா்வையிட்டுள்ளாா். வருகையின் போது நெடுந்தீவில் கனத்த மழை இடம்பெற்றுள்ளது.
நிலமைகளை நோில் சென்று பாா்வையிட்டதுடன் பிரதேச செயலரும் நிலமைகளை நோில் விளக்கியுள்ளாா். சுமாா் 1.30 மணி நேரங்கள் மாத்திரமே நெடுந்தீவில் தங்கி நின்றுள்ளாா்.
பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவா் திரு.அருந்தவசீலன் அவா்கள் துறைமுக திருத்தம் தொடா்கவும் புரவி புயல் பாதிப்பின் மீள் கட்டுமானம் தொடா்பாகவும் மனுவினை இராஜங்க அமைச்சாிடம் சமா்ப்பித்தாா் அனைத்து விடயங்களினையும் அமைச்சா் உள்வாங்கிகொண்டாா் ஆயினும் உடனடியாக எந்த உறுதி மொழியும் வழங்காவிட்டாலும் நேரடியாக விடயங்களை பாா்வையிட்டுள்ளாா்.