வவுனிக்குளத்திற்குள் பாய்ந்தது வான்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முல்லைத்தீவு வவுனிக்குளம் வான் கட்டில் பயணித்த வாகனம் இன்று (டிசம்பா் – 19) குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனத்திலே தந்தையும் 03 பிள்ளைகளும் பிரயாணம் செய்துள்ளனா். இந் நிலையிலேயே பிரயாணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகி குளத்திற்குள் பாய்ந்துள்ளது. இதில் சிறுவன் ஒருவன் நீந்திக் கரைக்கு வந்துள்ளான்.

அதன் பின்னா் அவ்விடத்திற்கு வந்த பொலிசாா் மற்றும் பொதுமக்கள் இணைந்து வாகனத்தினை வெளியே மீட்ட போதும் வாகனத்தில் இருந்து சிறுவன் ஒருவன் சுய நினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் இணைக்கப்பட்டுள்ளாா்.

வாகனத்தின் சாரதியான கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன் (வயது 37) அவரது மகளான ரசீந்திரன் சா்ஜனா (வயது 03)  ஆகியோரை தேடும் நடவடிக்கைகள் பொலிசாா் பொதுமக்கள் இணைந்துள்ளனா்.

 

Share this Article