அனோஜன் வழக்கு நிலைமை தொடர்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கண்காணிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் அனோஜன் சிவராசா தொடர்பான வழக்கு நிலைவரத்தை தாம் கண்காணித்து வருவதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அமைச்சு இன்று (18/09) வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலமாகவும், கொழும்பில் உள்ள சவூதி அரேபியத் தூதரகத்துடன் இணைந்து செயற்பட்டும் அமைச்சகம் இந்த வழக்கின் நகர்வுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

மேலும், இராஜதந்திர வழிகள் மூலம் உரிய சவூதி அதிகாரிகளுடன் அமைச்சு தொடர்பில் இருப்பதுடன், சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் நலன்களைப் பாதுகாக்கவும் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் உரிய நடவடிக்கைகளை அமைச்சு எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Share this Article
Leave a comment