கிளிநொச்சியில் இரண்டு மாத குழந்தைக்கு கொரோனா

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தர்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தைக்கு தொற்று ஏற்றுப்பட்டுள்ளது.
நேற்று மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையின் தந்தை கிளிநொச்சியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுபவர் என்றும் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதனை தொடர்ந்து அவரது மனைவி மற்றும் இரண்டு மாதக் குழந்தைக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தாய்க்கு அண்டிஜன் பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்த போதும் அவருக்கு இருக்கும் அறிகுறிகள் தொற்றுக்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதனால் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Share this Article