போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் விசேட பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது எட்டு லட்சத்து பத்தாயிரம் ரூபா மதிப்புள்ள 1000 ரூபா போலி நாணயத்தாள் இவ்வாறு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியைச்சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை எனவும், சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த போலி நாணயத்தாள்களின் பெறுமதி தொடர்பில் கணக்கிடப்பட்டு வருவதாகவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

Share this Article