இரணைதீவில் 03வது நாளாகவும் போரட்டம் தொடா்கின்றது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கொரோனா´ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று இடம் பெற்றது.

´கொரோனா´ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த  03 ஆம் திகதி இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத் தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும் தொடர்சியாக இரணை தீவு பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (5) இரணை தீவு பகுதியில்   மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article