கொரோனா பாதிப்பால் மன்னாாில் முதலாவது மரணம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மன்னாரில் முதலாவது கொரோனா மரணம் இன்று செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்துள்ளது.

இதனை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் ‘சைட் சிட்டி’ பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 30 ஆம் திகதி சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி குறித்த நபருக்கு வைத்தியசாலையில் வைத்து பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கில் 2வது கொரோனா நோயாளியின் மரணம் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

TAGGED:
Share this Article