முல்லைத்தீவில் சிறப்பாக நடைபெற்ற ‘யோகம் வளர்த்த யாகம்’ நூல் வெளியீட்டு விழா!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின், பண்டாரவன்னியன் மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை, ‘யோகம் வளர்த்த யாகம்’ எனும் கட்டுரைத் தொகுப்பு  நூலொன்று வெளியிடப்பட்டது.

கலைஞர் குமாரு யோகேஸ்வரன் எழுதிய இந்நூல் வெளியீட்டிற்கு, மூத்த கலைஞர் மாயவதாசன் தலைமை தாங்கினார்.நிகழ்வின் பிரதம விருந்தினராக,  முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

நூலுக்கான மதிப்பீட்டுரையினை, கவிஞர் யோ.புரட்சி கவிநடை வடிவில் வழங்கினார். தொடர்ந்து நூலுக்கான வாழ்த்துரைகளை பல அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் முதலானோர் வழங்கினார்கள்.

‘ஈழத்தமிழ் கலைஞர் ஒன்றியம்’ மற்றும் ‘மகரந்தம்’ கலையமைப்பினர் இணைந்து இவ்வெளியீட்டை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment