பிரித்தானியா போலி விசா மோசடியில் ஈடுபட்ட 24 வயது இந்திய இளைஞர் அதிரடிக் கைது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை மற்றும் இந்தியத் தமிழர்களுக்குப் போலி ஆவணங்கள் மூலம் பிரித்தானிய விசா பெற்றுக்கொடுப்பதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் மோசடியில் ஈடுபட்ட 24 வயதுடைய இந்திய இளைஞர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்

பர்மிங்காம் ஸ்மெத்விக் பகுதியைச் சேர்ந்த ஜெம்ராஜ் என்பவரே தேசிய குற்றத்தடுப்பு முகமை மற்றும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் புதிய குடிவரவுச் சட்டமான Border Security, Asylum and Immigration Act 2025 சட்டத்தின் 17 ஆவது பிரிவின் கீழ் இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமாகக் குடிவரவு ஆலோசனைகளை வழங்கியதாகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இவரைப் போன்று போலி விசா மற்றும் புகலிடக் கோரிக்கைகள் தொடர்பில் மோசடியில் ஈடுபடும் முகவர்களுக்கு எதிராகப் பிரித்தானிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

வெளிநாடு செல்லத் துடிக்கும் தமிழர்கள் இவ்வாறான மோசடி முகவர்களிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

Share this Article
Leave a comment