பல்கலைகழக பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு..!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நேற்று (25/07) தென்கிழக்கு பல்கலைகழகத்தில் நடைபெறும் தனது மனைவி மற்றும் தனது சகோதரியின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்ற 2 இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மஹியங்கனை பதியதலாவ வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைகள் மேற்கொண்ட போதிலும் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள், 23, 32 வயதுடைய அக்குறணை –  தலகஹ கந்தை முனவ்வறா மஹல்லாவைச் சேர்ந்த அஷ்கர் மற்றும் ஸப்றான் என்பவர்கள் ஆவர்.

Share this Article
Leave a comment