மண்டைதீவில் யாழ் மாவட்ட வன பரிபாலன திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் கண்டல் தாவரங்கள் நடுகை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

உலக கண்டல் தாவர தினத்தை முன்னிட்டு மண்டைதீவு கண்டல் தாவர ஒதுக்கப்பகுதியில் இன்றையதினம் (24/07)  கண்டல் தாவரங்கள் நடுகை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிதான வீதியின் ஓரமாக மண்டைதீவு கண்டல் தாவர ஒதுக்கப்பகுதியில் யாழ் மாவட்ட வன பரிபாலன திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது

யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை,  வேலணை பிரதேச செயலகம், யாழ் மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர மூல வளங்கள் பேணல் திணைக்களம், தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை திணைக்களம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டது.

Attachment.png

Share this Article
Leave a comment