வட மாகாண சுகாதாரத் துறையில் புதிய முன்னேற்றம்: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடக்கு மாகாணத்தின் ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சும் வட மாகாண சபையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில்  கடந்த ஏப்ரல் 09 அன்று கொழும்பிலுள்ள Galle Face Hotel- லில் கையெழுத்திடப்பட்டது.

உலக வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் “Primary Healthcare System Enhancing Project (PHSEP)” திட்டத்தின் கீழ், ஆரம்ப கட்டமாக 2026 ஆம் ஆண்டில் 500 மில்லியன் ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் மொத்தமாக 2000 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் வட மாகாணத்தில் உள்ள ஆரம்ப சுகாதார சேவை நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் நவீனப்படுத்தப்படுவதோடு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தரமும் திறனும் உயர்த்தப்பட உள்ளது. குறிப்பாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படுவதன் மூலம் மக்களுக்கு விரைவான மற்றும் தரமான சிகிச்சை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இதன் மூலம் வட மாகாண மக்களின் மொத்த சுகாதார நிலை உயர்த்தப்படுவதோடு, சுகாதார சேவைகளில் சமத்துவமும் அணுகுமுறையும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், வட மாகாண சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Share this Article
Leave a comment