அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்றைய தினம் (07.04) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் இடமாற்றம் உள்ளடங்கலான நிர்வாகப் பிரச்சனைகள் தொடர்பாக அரசாங்க அதிபருடன் விரிவாக கலந்துரையாடியதுடன், பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் அரசாங்க அதிபரிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பொ.ஸ்ரீவர்ணன், சகல பிரதேச செயலக சமுர்த்தி தலமையக முகாமையாளர்கள், மாவட்டச் செயலக சமுர்த்தி விடய முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.