மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள்மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றையதினம் திங்கட்கிழமை (செப்.29) மன்னாரில் பொது முடக்கல் போராட்டம்இடம்பெற்றதுடன் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவிலான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
காலை முதல் மன்னார் பஜார் பகுதி உள்ளடங்களாக அனைத்து பகுதிகளிலும்உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததுடன் தனியார்போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.பல்வேறு கிராமங்களில்உள்ள மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை.

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலைகோபுரங்கள் அமைத்தல்,மன்னாரில் கனிய மணல் அகழ்வு மற்றும் கடந்த இருதினங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் பொதுமக்கள் மற்றும்அருட்தந்தையர்கள் தாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்களை கண்டித்து குறித்தபேரணி ஆரம்பமானது.
பின்னர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய மக்கள்காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக கோஷங்களைஎழுப்பினர்.இதனால் குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்ற நிலைஏற்பட்டது.பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மக்கள்ஒன்று கூடி இடத்திற்கு வருகை தந்தார். இதன் போது போராட்டக்குழு சார்பாகஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டிய கடிதம் அரசாங்க அதிபரிடம்கையளிக்கப்பட்டது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில்தொடர்ச்சியாக போராட்டம் இடம் பெறும் பகுதிக்குச் சென்றனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில்ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் தாக்குதலைமேற்கொண்ட பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதனால் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கலகம் அடக்கும் பொலிஸார் அவ்விடத்திற்குஅழைக்கப்பட்டனர். பின்னர் தொடர்ச்சியாக முறுகல் நிலை ஏற்பட்ட நிலையில்மத தலைவர்கள் அவ்விடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன்கதைத்து அவ்விடத்தில் இருந்து அனைவரையும் அகற்றினர். அதனை தொடர்ந்துபஜார் பகுதியில் நின்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.