அனுராதபுரம் – குருணாகலை பிரதான வீதியின் தலாவ–மீரிகம சந்திக்குஅருகிலுள்ள மொரகொட பகுதியில் இன்று (செப்.25) அதிகாலை நடந்த வீதிவிபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த 4 இளைஞர்கள் உயிரிழந்த்துள்ளனர்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் இருந்து பயணித்தவேன் ஒன்றே இந்த விபத்தில் சிக்கியதாக தெரியவருகின்றது.

விபத்தில் காயமடைந்த வானின் சாரதி மற்றும் லொறியின் சாரதி உட்பட 7 பேர்சிகிச்சைக்காக தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் வானில் பயணித்த 4 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு,செம்மலை பகுதியை சேர்ந்த தி.விமலானந்தன் (வயது -38) ,
புதுக்குடியிருப்பு – வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது-31) , புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது-25) மற்றும் தேனுயன்(வயது-25) ஆகியோர் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
வானின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்திற்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.