மன்னார் காற்றாலை திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கவும் – ஜனாதிபதிஅதிரடி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மன்னாரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்திதிட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமாரதிஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டஅரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு ஆவணம், வட்சப் செயலி ஊடாகதெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பிரதிகளைத் தாம் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 36 காற்றாடிகளுக்கு மேலதிகமாக, ஆரம்பிக்கப்பட்ட இரண்டு திட்டங்களுக்கான 14 காற்றாடிகளை அமைக்கும்பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதியின் பணிப்புரையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த காற்றாலை நிறுவல் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துமன்னாரில் தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன், கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலும் போராட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டங்களின் பின்னர் நிலைமையை அறிந்துபரிந்துரைக்கும் வகையில் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி அமைத்திருந்தார்.

அந்த குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டநிலையிலேயே, ஜனாதிபதி பணிப்புரையும் வெளியாகியுள்ளது.

அதேநேரம், இந்த பணிப்புரைக்கு மேலதிகமாக, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளசுற்றாடல் சம்பந்தமான தடுப்பு நடவடிக்கைகளையும் உரிய முறையில்முன்னெடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அரசாங்க அதிபர்தெரிவித்துள்ளார்.

Share this Article