6 கிலோ கஞ்சாவுடன் வவுனியாவில் ஒருவர் கைது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

12 லட்சம் ரூபாய் பெறுமதியான 6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியதகவலையடுத்து வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரகீத் சுரங்கவீரத் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஸவின் தலைமையிலானகுழுவினர் வவுனியா நகரப் பகுதியில் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது மோட்டர் சைக்கிளில் கஞ்சா கொண்டு செல்லப்பட்டமைகண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன், மோட்டர் சைக்கிளும் உடமையில் இருந்த 6 கிலோ கஞ்சாவும்மீட்கப்பட்டன.

சம்பவத்தில் வவுனியா மருக்காரம்பளை பகுதியைச் சேர்ந்த 47 வயதுயை நபரேகைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Article