மோட்டார் சைக்கிள் விபத்தில் அருட்தந்தை உயிரிழப்பு..!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நேற்று மதியம் மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவில் யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் கள்ளியடி பகுதியில் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம்நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற பேருந்தை முந்திச்செல்ல முயன்றபோது, செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்துவிபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்னால் அமர்ந்துபயணித்தவரும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், இளவாலை பகுதியை சேர்ந்த 45 வயதான அருட்தந்தை றெஜினி யூட் அவ்லின் அடிகளார் ஆவார்.

இறுதி வணக்க நிகழ்வு வியாழக்கிழமை (செப்.25) பிற்பகல் 3:00 மணிக்குயாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் யாழ்ப்பாண ஆயரால் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Share this Article