வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுரகுமாரதிஸாநாயக்க அவர்களால் இன்று நண்பகல் (செப். 02) ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டுமுன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்துவைக்க ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க வடக்குக்கு விஜயம் செய்துள்ளார் .

இன்று நண்பகல் 1.00 மணியளவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப்பணிகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
மிகநீண்டகால கோரிக்கையாக இருந்த வட்டுவாகல் பால நிர்வாகப் பணிகளைஆரம்பிக்க வந்த ஜனாதிபதி அவர்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்அ.உமாமகேஸ்வரன் அவர்கள் வரவேற்றிருந்தார். தொடர்ந்து பால நிர்மாணப்பணிக்கான பெயர்ப்பலகையை ஜனாதிபதி திறந்து வைத்து மக்கள் மத்தியில்உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் அமைச்சர்கௌரவ பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் இ.சந்திர சேகரன் , பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களானதிலகநாதன், ஜெகதீஸ்வரன்,ரவிகரன் மதகுருமார்கள், திணைக்களங்களின்அதிகாரிகள் , தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும்கலந்துகொண்டனர்.