‘கற்பகத்தரு வளம்’ ஜனாதிபதி அனுர தலைமையில் புதுக்குடியிருப்பில்ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முல்லைத்தீவு மாவட்டத்தினை உள்ளடக்கி வடக்கு தெங்கு முக்கோணவலயத்தினை உருவாக்கும் அங்குரார்ப்பண நிகழ்வானது இன்றைய தினம்(செப். 02) முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கந்தசுவாமி ஆலயவளாகத்தில்  ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸ நாயக்க தலைமையில்நடைபெற்றது.

சமய சம்பிரதயங்களின் அடிப்படையில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அவர்களைமாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள்  பொன்னாடை போர்த்திவரவேற்றார்.

தெங்கு முக்கோண வலையங்களுள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை, யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறைமுதலான இடங்கள் தெங்கு முக்கோண வலையங்களாகபிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தென்னைப் பயிர்ச்  செய்கையினை ஊக்குவிப்பதற்காகவும்பொருளாதாரத்தினை மேம்படையச் செய்யும் நோக்கிலும் இந்த செயற்றிட்டம்வடமாகாணத்தில் 16 ஆயிரம் ஏக்கரில் செயற்படுத்தப்படவுள்ளது.

இதற்கான தென்னம்பிள்ளைகளை இலவசமாக வழங்கவுள்ளதுடன் மிகக்குறைந்த விலையில் மானிய அடிப்படையிலும்  வழங்கப்படவுள்ளது.

இந்த  நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் அமைச்சர்கௌரவ பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் கௌரவ சந்திர சேகரம், பெருந்தோட்ட உட்கட்டமைப்புகள் அமைச்சர் கௌரவ சமந்த வித்தியாரட்ண, பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவதிலகநாதன், ஜெகதீஸ்வரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின்துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராசா, யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதுவர்சாய்முரளி, மதகுருமார்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் , தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article