கிளிநொச்சியில் அதிகளவான தோட்டாக்கள் மீட்பு..

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி புது முறிப்பு  விக்னேஸ்வரா வித்தியாலயம் அருகாமையில்நேற்றையதினம் (ஓகஸ்ட் 07) கிளிநொச்சி பொலிசாரால் அதிகளவான புள்ளட்மீட்கப்பட்டுள்ளது

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது

கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயம் அருகாமையில்இன்றைய தினம் காலை சந்தேகத்திற்கிதமாக தோட்டாக்கள் அதிகளவு சிதறிகாணப்பட்டதுடன் அதனை அவதானித்த பாடசாலை சமூகம் உடனடியாககிளிநொச்சி பொலிசார் மற்றும் இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளனர்

அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட இடத்திற்கு வருகை தந்த பொலிசார்இராணுவம் சிதறி காணப்பட்ட தோட்டாக்களை மீட்கும் பணியினை பாதுகாப்பானமுறையில் மேற்கொண்டு உள்ளனர்

தொடர்ந்து 11மணியளவில் 150ற்கு மேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டதுடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார்மேற்கொண்டு வருகின்றனர்

Share this Article